புதுடெல்லி: உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்படும் உடல் உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தேசிய உறுப்பு, திசு மாற்று சிகிச்சை அமைப்பான ‘நோட்டோ’ (NOTTO) பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில், கடந்த 2024-25ஆம் ஆண்டில் மட்டும் ஏறக்குறைய 19,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன.
இவற்றுள் 3,403 (17 விழுக்காடு) உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் இறந்த நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் அல்லது மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் ஆகும்.
“தானம் செய்பவர்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால், தானம் பெறும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, உறுப்புகளை ஒதுக்குவதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம்,” என ‘நோட்டோ’ கூறியுள்ளது.