தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை: நிர்மல்குமார்

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை: நிர்மல்குமார்

1 mins read
c4c09e26-040b-49c0-8d7a-11d091d06a63
தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். - கோப்புப் படம்: ஒன் இந்தியா தமிழ்

சென்னை: தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகத் தமிழக ஆளுநர் மாளிகை மாறுபட்ட வழிகாட்டுதல்களை அளித்ததாகக் கேள்விப்படுகிறோம் என்றும் அது தவறான செயல்பாடு என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

பாஜக ஆளும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளின் வாழ்த்தே முதலில் பாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் மட்டும் அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது தவறான போக்கு என்றார்.

நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.

தமிழக ஆளுநர் அர்லேகர் கலந்துகொண்ட இந்த விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும் இரண்டாவதாகத் தேசிய கீதமும் மூன்றாவதாகத் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டன. இது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை உத்தரவிட்டதன் பேரிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது எனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் ஆளுநருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இத்தகைய செயல்பாடு தவறான போக்கு எனத் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நிர்மல் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்