எதிர்க்கட்சி எம்.பி.க்களைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பிரியங்கா

1 mins read
8d59d2be-85d0-4174-92f3-9068b23788df
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை (நவம்பர் 28) பதவியேற்றுக்கொண்டார்.  - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பிரியங்கா காந்தி மக்களவைக்கு வந்து எதிர்க்கட்சியினருடன் உரையாடினார்.

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினராகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை (நவம்பர் 28) பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 4வது நாள் அமர்வு வியாழக்கிழமை கூடியதும், அரசிலமைப்புச் சட்ட புத்தகத்தின் பிரதியைக் கையில் ஏந்தியவாறு பிரியங்கா இந்தியில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், சம்பல் வன்முறை மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், இரண்டாவது நாளாக மக்களவைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார் பிரியங்கா. பின்னர் போராட்டத்தின் மத்தியில், எதிர்க்கட்சி எம்.பி.க்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவர் மற்ற உறுப்பினர்களை சந்தித்தார். பின்னர், ​​திமுக எம்பி கனிமொழியைச் சந்தித்து அவருடன் சிறிது நேரம் உரையாடினார். மேலும், அவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பிற கட்சி உறுப்பினர்களுடனும் உரையாடினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்