புதுடெல்லி: இந்திய தொழில்துறை உற்பத்தியானது, கடந்த நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு 6.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
தொழில்துறை உற்பத்திக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. கடந்த நவம்பரில், 25 மாதங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு உற்பத்தி வளர்ச்சி 6.7 விழுக்காடாக பதிவாகியுள்ளது.
கடந்த அக்டோபரில் உற்பத்தி வளர்ச்சி அளவு 0.5 விழுக்காடாக இருந்தது. முன்னதாக கடந்த 2023, நவம்பர் மாதம் இந்த வளர்ச்சி விகிதம் 11.9 விழுக்காடாக உயர்ந்து இருந்தது என இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சு வெளியிட்ட தரவுகள் தெரிவித்தன.
இந்த வளர்ச்சி தொடர வாய்ப்புள்ளதாக துறைசார் நிபுணர்கள் கருதுகின்றனர்.

