திருப்பதி விமான நிலையத்தின் பெயர் மாற்ற பரிந்துரை

1 mins read
e037dfcb-2d90-4cdc-adc1-0eabd2959269
திருப்பதி கோவில் அறங்காவலர் குழுக் கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார். - படம்: ஊடகம்

அமராவதி: திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அனைத்துலக விமான நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமள ராவ் ஆகிய இருவரும் பெயர் மாற்றம் குறித்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்படும் என்றனர்.

முன்னதாக, திருப்பதி கோவில் அறங்காவலர் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இருவரும் கூறினர்.

திருப்பதியில் தண்ணீர், நெய், உணவுப் பொருள்களைப் பரிசோதனை செய்யும் மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்றார் அறங்காவலர் குழுத் தலைவர் பிஆர் நாயுடு.

குறிப்புச் சொற்கள்