அமிர்தசரஸ்: சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) போராட்டம் நடத்தினர்.
அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக முழக்கம் எழுப்பிய அவர்கள், அவரது உருவப் பொம்மையையும் எரித்தனர்.
முன்னதாக, சமையல் எரிவாயு விலையை உயர்த்தி, மக்களிடமிருந்து பாஜக உணவைப் பறிக்கிறது என்று பஞ்சாப் மாநில அமைச்சர் ஹர்பால் சிங் சீமா சாடியிருந்தார்.
இந்தியாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததுமுதலே, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

