துருக்கிக்கு எதிர்ப்பு: சலவைக்கல் இறக்குமதியை நிறுத்த இந்திய வணிகர்கள் முடிவு

1 mins read
4d8b0df5-1274-4e84-b4fb-c58fab6f7f39
துருக்கியை மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியர்கள் சமூக ஊடகங்களில் காரசார கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். - கோப்புப்படம்: ஊடகம்

மும்பை: பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்நாட்டில் இருந்து சலவைக்கல் (marble) இறக்குமதியை மொத்தமாக நிறுத்த இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

அண்மையில் இந்திய ராணுவம் மீது பாகிஸ்தான் ஆளில்லா வானூர்திகளை ஏவி தாக்குதல் நடத்தியது. அவை அனைத்தும் துருக்கி வழங்கியவை என்பது உறுதியானது.

மேலும், துருக்கி அதிபர் தயிப் எர்துவான் நேரடியாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃபைத் தொடர்புகொண்டு பேசி தமது ஆதரவைத் தெரிவித்தார்.

எனவே, துருக்கியை மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என இந்தியர்கள் சமூக ஊடகங்களில் காரசார கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், துருக்கிக்குச் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை மும்பை வியாபாரிகள் திருப்பி அனுப்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரூ.1,200 முதல் ரூ.1,500 கோடி வரை துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துருக்கிச் சலவைக்கல் இறக்குமதியையும் நிறுத்த இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தியா ஆண்டுதோறும் ஏறக்குறைய 16 லட்சம் டன் ச்லவைக்கற்களை இறக்குமதி செய்கிறது என்றும் அதில் 70% துருக்கியிலிருந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்