தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்: இணையச்சேவை முடக்கம்

2 mins read
b419e400-e172-4eeb-a78e-9635c3fdcff6
ஐந்து நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதையடுத்து அங்கு ஐந்து மாவட்டங்களில் ஐந்து நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தௌபால், காக்ச்சிங், பிஷ்ணுபூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஐந்து நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன.

அம்மாவட்டங்களில் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தௌபால், காக்ச்சிங், பிஷ்ணுபூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஐந்து நாள்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தன. பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே திடீரென மோதல் மூண்டது. இதனால் வெடித்த கலவரத்தின்போது இருநூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்,

இதையடுத்து அங்கு பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இணையச் சேவைகளும் முடங்கின.

அதன் பிறகு நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் முழு அமைதி திரும்பவில்லை.

மணிப்பூரில் தற்போது அதிபர் ஆட்சி அமலில் உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு ஆட்சியில் இருந்த பாஜக அரசு கலைக்கப்பட்டுவிட்டது.

இத்தகைய சூழலில் அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அங்கு மோதலில் ஈடுபட்ட இருசமூகங்களில் ஒன்றான மெய்டி சமூகத்தின் தலைவர் அரம்பாய் தெங்கோல் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதுவே மீண்டும் கலவரம் மூண்டதற்கான முக்கியக் காரணமாகும். அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களில் திரளாகக்கூடி போராட்டங்களில் ஈடுபட்டனர். சாலையில் டயர்களை எரித்து நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். அங்குள்ள தற்போதைய நிலை குறித்து மணிப்பூர் காவல்துறை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

“சமூக விரோதிகள் சில படங்களையும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் காணொளிகளையும் பகிர்ந்து சட்டம் ஒழுங்கு நிலையை சீர்குலைக்கக்கூடும் என்பதால் இணையச் சேவை முடக்கப்பட்டதாக மணிப்பூர் மாநில ஆணையர் - உள்துறைச் தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்