மும்பை: மராத்தா சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே பாட்டீலுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போது மும்பையில் உள்ள ஆசாத் திடலை தனது போராட்டக்களமாக மாற்றியுள்ளார் மனோஜ்.
தனக்கு நல்ல பதில் கிடைக்கும் வரை, அத்திடலை விட்டு வெளியேறப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
உயிரே போனாலும், தாம் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளதால், மகாராஷ்டிர மாநிலத்தில் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தா சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு கோரி, நீண்ட காலமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமூக ஆர்வலரான மனோஜ் ஜராங்கே பாட்டீல் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார்.
அவர் தமது ஆதரவாளர்களுடன் ஆசாத் திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஏராளமானோர் அங்கு கூடியதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மும்பையில் உள்ள தெருக்களில் கூடியுள்ள மனோஜ் ஆதரவாளர்கள், போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உடனடியாக வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, ஆசாத் திடலை விட்டு மனோஜ் ஜராங்கே உடனடியாக வெளியேற வேண்டும் எனக் காவல்துறை கூறியுள்ளது. ஆனால், இதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
நீதியையும் கடவுளையும் நம்புவதாகவும் நீதி நிலை நாட்டப்படும் என்று நூறு விழுக்காடு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
போராட்டம் காரணமாக, மும்பையில் நிலவுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.