புதுவையில் ரூ.500 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

1 mins read
64591c9d-2c6e-4c08-a1e8-38284f35c6a8
புதுவை முதல்வர் ரங்கசாமி. - படம்: ஊடகம்

புதுவை: புதுவையில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கடல் நீரைக் குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அதிக உப்புதன்மையைக் குறைத்து குடிநீர் வழங்கும் பொருட்டு, ஏழு இடங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து,

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்படும்.

முதற்கட்டமாக, சுதேசி பஞ்சாலை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் ரூ.3.85 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

“தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்க ஆவன செய்யப்படும். பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 2,500 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள அரசு காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என முதல்வர் ரங்கசாமி கூறினார்.

புதுவையில் குடிநீர், சாலை வசதிகள், கழிவுநீர் பாதாள சாக்கடைத் திட்டம், நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு,உப்பு நீக்கும் ஆலையை அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் ரூ.4,750 கோடி கடன் பெற்று அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவுபெறும் இத்திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்