150 கடைகள் தீக்கிரை

1 mins read
காணொளி இணைப்பு!
09d98c92-1509-4500-b41e-97e879da0eb7
தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - காணொளிப்படம்: ஊடகம்

புனே: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 6) ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் கிட்டத்தட்ட 150 கடைகள் எரிந்து சாம்பலாயின.

புனே நகரம், பிம்பிரி சிஞ்ச்வாட்டில் உள்ள குடல்வாடி பகுதியில் இரவு 1.30 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீயணைப்பாளர்கள் பல மணி நேரம் போராடி அதனைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பழைய பொருள்களை விற்கும் 150க்கும் மேற்பட்ட கடைகள் தீயின் கோரப் பிடியில் சிக்கி, முற்றிலுமாக அழிந்துபோயின.

குறிப்புச் சொற்கள்