நகர்ப்புற வளர்ச்சியில் முதலிடத்தில் புனே, மூன்றாவது இடத்தில் சென்னை

1 mins read
1550b5fb-f5be-4bd6-a199-e3d4e9b8f609
புனேயின் நவீன நகர். - படம்: இணையம்

புதுடெல்லி: இந்​திய நகரங்​களில், மகா​ராஷ்டிரா மாநிலத்​தில் உள்ள புனே நகரம் கடந்த 30 ஆண்​டு​களில் மிகப் பெரிய வளர்ச்​சியை எட்​டி​யுள்​ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதன் நகர்ப்​புற எல்லை விரிவடைந்​து, தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யில் நாட்​டில் முதல் இடத்தைப் பிடித்​துள்​ளதாக ஆய்வு சுட்டியது.

நகரங்​களில் கட்​டடங்​கள் அதி​கரிக்​கும் அளவை செயற்​கைக்​கோள் படங்களைக் கொண்டு கணக்​கிட்டு ‘ஸ்​கொயர் யார்ட்​ஸ்’ என்ற ரியல் எஸ்​டேட் இணை​யத்தளம் ‘சிட்​டிஸ் இன் மோஷன்’ என்ற ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இரண்​டாவது இடத்தில் பெங்​களூரும் மூன்றாவது இடத்தில் சென்னையும் உள்ளன.

இதே காலத்​தில் கட்​டடங்​களின் அளவு 197 சதுர கிலோ மீட்​டரில் இருந்து 467 சதுர கிலோ மீட்டர் ஆக உயர்ந்​துள்​ளது. வாக​னம், மின்னியல், தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​கள், சரக்குப் போக்​கு​வரத்து ஆகிய துறை​களின் வளர்ச்​சி​யால் சென்​னை​யும் வளர்ச்​சி​யடைந்​தது.

டெல்லி தேசிய தலைநகர் மண்​டலம், ஹைத​ரா​பாத், அகம​தா​பாத், கோல்​கத்​தா, மும்பை ஆகிய நகரங்​களின் வளர்ச்சி விகிதம் அடுத்​தடுத்த இடங்களில் உள்​ளது என்று அந்த ஆய்​வறிக்​கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்