200 கிலோகிராம் கேக்கில் கட்டடம் கட்டிய இந்தியப் பெண்

200 கிலோகிராம் கேக்கில் கட்டடம் கட்டிய இந்தியப் பெண்

1 mins read
34f03058-eea4-49d4-9aa3-aaa4a8ec6267
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் புனே நகரில் 200 கிலோகிராம் கேக்கில் கட்டடம் ஒன்றைக் கட்டி இந்தியப் பெண் சாதனை புரிந்துள்ளார்.

அந்த அழகியப் படைப்பை படைத்தவர் புனேயில் உள்ள 37 வயது பிராச்சி தபால் டெப்.

கேக்கால் கட்டப்பட்ட அந்த கட்டடம் கிட்டத்தட்ட 10.1 அடி நீளம் கொண்டது.

200 கிலோ கிராம் எடை கொண்ட அந்த கட்டட வடிவம் 4.7 அடி உயரமும், 3.8 அடி அகலமும் கொண்டது.

லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலக சாதனைப் புத்தகத்தில் பிராச்சியின் சாதனை இடம்பிடித்துள்ளது.

பார்க்க அழகாக இருக்கும் அவரது கட்டடம், சுவைக்கவும் நன்றாக இருந்தது என்று அதிகாரிகள் கூறினர்.

இது பிராச்சியின் மூன்றாவது சாதனை. இதற்கு முன்னர் இது போன்று இரண்டு சாதனைகளைப் படைத்து சாதனைப் புத்தகத்தில் அவர் இடம்பிடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்