பஞ்சாப்: தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் ஆகும்.
ஆசியாவிலேயே குறைந்த வயதில் அச்சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாப்பைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார்.
ஆகஸ்ட் 18 அன்று கிளிமஞ்சாரோ மலையின்மீது ஏறத் துவங்கிய டெக்பீர் சிங், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று, அந்த மலையின் மிக உயரமான இடமான உஹுருவை அடைந்தார்.
டெக்பீர் சிங்கின் இந்தச் சாதனை மலையேற்றத்தின்போது அவரின் தந்தையும் உடனிருந்தார். டெக்பீரின் இந்தச் சாதனை குறித்துப் பேசிய அவனுடைய தந்தை, “டெக்பீர் சிங் இதற்காக கடுமையான மலையேற்றப் பயிற்சிகள், இதயம் மற்றும் நுரையீரலுக்கான சுவாசப் பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொண்டார். அவரது இந்தச் சாதனை எங்கள் குடும்பத்தைப் பெருமைப்படுத்தியுள்ளது,” என்று சொன்னார்.

