ரேடாரை அழிக்கும் ‘ருத்ரா’ ஏவுகணைச் சோதனை வெற்றி

ரேடாரை அழிக்கும் ‘ருத்ரா’ ஏவுகணைச் சோதனை வெற்றி

1 mins read
282cb38b-252e-4552-8236-5fd7e10ed718
இது ஒரு வரலாற்றுச் சாதனை என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். - படம்: மெட்ரோ வார்த்தா

சந்திப்பூர்: எதிரிகளின் ‘ரேடார்’களைத் தாக்கி அழிக்கும் ‘ருத்ரா M-II’ ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

‘ருத்ரா’ ஏவுகணை முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்தியத் தற்காப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.

சுகோய் போர் விமானத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், ‘ருத்ரா’ ஏவுகணை தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தரைப்பகுதி, கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள், தகவல் தொடர்புத் தளவாடங்களை 300 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது ‘ருத்ரா’ ஏவுகணை.

இந்தியாவின் தற்காப்பு, துல்லியமான தாக்குதல் திறனைப் பலப்படுத்தும் நோக்கில் இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்