புதுடெல்லி: மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அயலக காங்கிரஸ், அமெரிக்க வாழ் இந்திய சமூகம் சார்பாக அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தாம் பயனுள்ள கலந்துரையாடல்கள், ஆலோசனைகளில் ஈடுபடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாகவும் இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க, இந்திய சமூகத்தினர், குறிப்பாக, வணிக தலைவர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் ராகுல் காந்தியுடனான கலந்துரையாடலை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்,” என்று அக்கட்சியின் அயலக காங்கிரஸ் கட்சி பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார்.
“ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
“காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களைக் குறித்து அறிந்துகொள்ள பல்வேறு தரப்பு மக்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
“வர்த்தக மற்றும் தொழில்நுட்ப சமூகத்துடனான உரையாடல் குறித்து அதிக ஆர்வம் நிலவுகிறது,” என்றார் சாம் பிட்ரோடா.
செப்டம்பர் 8ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்திலும், செப்டம்பர் 9, 10ஆம் தேதிகளில் வாஷிங்டனிலும் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள முதல் பயணம் இது.

