'மோடி' பெயர் குறித்த அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை

'மோடி' பெயர் குறித்த அவதூறு வழக்கு; ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை

1 mins read
46d2da44-4ff2-4950-a047-16d43893b7c0
கோப்புப்படம்: ஏஎஃப்பி -

இந்திய அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சி எம்.பியுமான ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று ராகுல் காந்தி பேசியதாகவும் அது அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாகத் தாக்கி பேசியதாகவும் பாஜக கட்சி வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு உடனடியாக பிணையும் வழங்கப்பட்டு உள்ளது.

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நாட்டின் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்