ராகுல் காந்தி லங்காவி தீவுக்கு திடீர்ப் பயணம்

1 mins read
4869fbac-c4ca-445d-a58b-2ac039730aaa
லங்காவி தீவில் ராகுல் காந்தி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: அரசியல் பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மலேசியாவுக்கு மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணம் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள லங்காவி தீவுக்குச் சென்றுள்ளார் ராகுல். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மால்வியா.

அதில் தொப்பி, அரைக்கால் சட்டை அணிந்திருக்கிறார் ராகுல் காந்தி.

“பீகார் அரசியலின் வெப்பமும் புழுதியும் காங்கிரஸ் தலைவருக்குத் தாங்கவில்லை போலும். அதனால்தான் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். இல்லையெனில் யாருக்கும் தெரியாமல் ஏதேனும் ரகசிய சந்திப்புகளில் பங்கேற்க உள்ளாரா?” என்ற கேள்வியும் அமித் மால்வியாவின் பதிவில் இடம்பெற்றுள்ளது.

“மக்கள் மழை, வெள்ளப்பெருக்கு எனப் பல பிரச்சினைகளுடன் போராடி வருகிறார்கள். ஆனால், ராகுல் காந்தி அவ்வப்போது காணாமல் போவதிலும் சுற்றுலா செல்வதிலும் கைதேர்ந்து வருகிறார்,” என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

“பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் என்றால் ராகுல் வாக்கு சேகரிக்க வந்திருப்பார். ஆனால், அம்மாநில மக்கள் மழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் இவ்வேளையில் அவர் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்வது சரியா?” என்று ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்