‘ஐபேக்’ இயக்குநர் வீட்டில் சோதனை; ஆவணங்களை எடுத்துசென்ற மம்தா

2 mins read
eeda58cb-bc04-4767-bc4e-70fbfdd0136a
கோல்கத்தாவில் ‘ஐபேக்’ இயக்குநர் வீட்டில் நடந்த அமலாக்க சோதனையின்போது, குறிப்பிட்ட சில ஆவனங்களை அத்துமீறி எடுத்துசென்ற மம்தா பானர்ஜி. - படம்: பிடிஐ
multi-img1 of 2

புதுடெல்லி: ​கோல்​கத்​தா​வில் உள்ள ‘ஐபேக்’ நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் வீடு, புதுடெல்​லி​யில் உள்ள நான்கு இடங்​கள் உட்பட 10 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் வியாழக்கிழமை (ஜனவரி 8) சோதனை நடத்​தினர்.

மேற்கு வங்கத்தில் உள்ள ‘ஈஸ்​டர்ன் கோல்​பீல்ட்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்​த​மான சுரங்​கத்​திலிருந்து சட்டவிரோதமாக நிலக்​கரி தோண்டி எடுக்​கப்​பட்​ட​தாகப் புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக 2020ஆம் ஆண்டு மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கின் அடிப்படையில், அமலாக்​கத் துறை தனி​யாக வழக்குப்பதிவு செய்து விசா​ரணை மேற்கொண்டது.

குறிப்​பாக, இந்த முறை​கேட்​டில் பயனடைந்​த​தாக மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் உறவினரு​ம் திரிணாமூல் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜியிடம் அமலாக்​கத் துறை அதிகாரிகள் விசா​ரணை நடத்தி உள்​ளனர்.

இச்சூழலில், கோல்​கத்​தா​வின் சால்ட்​லேக் பகு​தி​யில் இருக்கும் ‘ஐபேக்’ நிறுவன அலு​வல​கம், அதன் இயக்​குநர் பிர​தீக் ஜெயின் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்க அதி​காரி​கள் ஜனவரி 8ஆம் தேதி காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர்.

பிரதீக் ஜெயின் வீட்​டில் சோதனை நடத்​தி​ய​போது, தனது உதவி​யாளர்​களு​டன் அங்கு வந்த மேற்கு வங்காள முதல்​வர் மம்தா பானர்​ஜி, அங்கிருந்து சில ஆவணங்​களையும் மின்​னணு சாதனங்​களையும் எடுத்​துச் சென்​றதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இது​போல, சால்ட்​லேக் பகு​தி​யில் உள்ள ‘ஐபேக்’ அலு​வல​கத்​துக்குத் தனது உதவி​யாளர்​களு​டன் வந்த மம்​தா, அங்​கிருந்தும் சில் பொருள்களை எடுத்துசென்றதாக அதில் அமலாக்கத் துறை குறிப்பிட்டது.

2021ஆம் ஆண்டு நடை​பெற்ற மேற்கு வங்காளச் சட்​டமன்றத் தேர்​தலில் திரிணா​மூல் கட்​சிக்கு ‘ஐபேக்’ நிறு​வனம் வியூ​கம் அமைத்​துக் கொடுத்​ததுடன் அக்கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப, ஊடகச் செயல்​பாடு​களையும் கவனித்​து வரு​கிறது என்​பது குறிப்பிடத்தக்​கது.

இதற்கிடையே, ‘ஐபேக்’ நிறுவனத்தின்மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் புது டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 9) போராட்டம் நடத்தினர்.

அப்போது, அமித்ஷாவுக்கு எதிராகவும் அமலாக்கத் துறைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

குறிப்புச் சொற்கள்