20,000 இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டுத் திட்டம்: ரயில்வே துறை முடிவு

20,000 இடங்களில் குடிநீர் வசதி மேம்பாட்டுத் திட்டம்: ரயில்வே துறை முடிவு

2 mins read
10f408b0-c0a5-4b9b-b515-cea6a2ad9b7f
ரயில் நிலை​யங்​களில் உள்ள சில குடிநீர் இயந்திரங்களில் ‘இகோலி’ நுண்ணுயிரி இருப்​பது சிஏஜி ஆய்​வில் தெரிய​வந்​தது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

மும்பை: ரயில் நிலையக் குடிநீரில் நுண்ணுயிரித் தொற்று இருப்பதாக இந்​தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அலு​வல​கம் (சிஏஜி) அறிக்​கை​யில் வெளிவந்​ததையடுத்​து, நாடு முழு​வதும் 20,000 இடங்​களில் குடிநீர் வசதி மேம்​பாட்​டுத் திட்​டத்தை செயல்​படுத்த ரயில்வே துறை முடிவு செய்​துள்​ளது.

ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்கு குடிநீர் இயந்திரங்கள் மூலம் வழங்​கப்​படும் இலவசக் குடிநீரைப் பரிசோதனை செய்​த​தில் ‘இகோலி’ (E.coli) நுண்ணுயிரி இருப்​பது சிஏஜி ஆய்​வில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ், ரயில்வே வாரி​யத் தலை​வர், தலைமைச் செயல் அதி​காரி மற்​றும் உயர் அதி​காரி​களு​டன் இணைந்து கடந்த 16ஆம் தேதி ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதன்​படி, முதல்​கட்​ட​மாக, ரயில்வே கண்காணிப்பின் கீழ் உள்ள 20,000 இடங்​களில் புதிய குடிநீர் சுத்​தி​கரிப்பு இயந்திரங்கள் நிறுவ முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

“நாடு முழு​வதும் உள்ள ரயில் நிலை​யங்​களில் குடிநீரின் தரத்தை உடனடி​யாக மேம்​படுத்த மத்​திய ரயில்வே அமைச்சு உத்​தர​விட்​டுள்​ளது,” என்று தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோ​சனைக் குழு உறுப்​பினர் ஜாபர் அலி தெரிவித்தார்.

“குடிநீர் விநி​யோகத்​தில் உடனடி​யாகச் சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள அதி​காரி​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. தேவைப்​படும் இடங்​களில் பழைய நீர் தேக்​கத் தொட்​டிகளை அகற்​றி​விட்​டு, புதிய தொட்​டிகளை அமைக்க ரயில்வே முடிவு செய்​துள்​ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

குடிநீர் ஆதா​ரங்​கள், விநி​யோக மையங்​கள் ஆகிய இரண்​டிலும் வழக்​க​மான நீரின் தரம் குறித்த பரிசோதனை​களை உறுதி செய்ய அதி​காரி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், கண்​காணிப்​பு, தொட்​டிகளைச் சுத்​தம் செய்​தல், குடிநீர் தர அறிக்​கைகளை வெளி​யிட்டு வெளிப்​படைத்​தன்​மை​யைப் பேண​வும் ரயில்வே துறை முடிவு செய்துள்​ளது.

முதல்​கட்​ட​ குடிநீர் மேம்​பாட்டுத் திட்​டத்தைச் செயல்​படுத்திய பின்​னர், படிப்​படி​யாக பல்​வேறு இடங்​களுக்​கும் திட்டம் விரிவுபடுத்​தப்​படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
ரயில்குடிநீர்சுகாதாரம்