பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவரும் நிலையில் அங்கு பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மைசூரில் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) இரவு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
மாநிலத்தின் பல இடங்களில் 112 மில்லிமீட்டர் முதல் 122.5 மில்லிமீட்டர் வரையிலான மழை பதிவானதாகக் கூறப்பட்டது.
அக்டோபர் 5ஆம் தேதி முதல் நான்கு நாள்களுக்கு மைசூரு, குடகு, சாம்ராஜ்நகர், மாண்டியா, ஹாசன், தும்கூர், பெங்களூரு மாநகரம், பெங்களூரு புறநகர், ராம்நகர், சிக்கபள்ளாபூர், கோலார் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும் தாவணகெரே, சித்ரதுர்கா, குடகு, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட 11 மாவட்டங்களுக்கு மழை தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

