தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

13 வயது விளையாட்டாளரை ரூ.1.10 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் அணி

2 mins read
e1ea086b-5dfc-441d-809d-1167f7adb58f
வைபவ் சூர்யவன்ஷி. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக நடைபெறும் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடி கொடுத்து, வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியுள்ளது.

இவருக்கு வயது 13.

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மாபெரும் ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் நாளான திங்கட்கிழமை (நவம்பர் 25), ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக, சிறுவன் சூர்யவன்ஷிக்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. அவரை வாங்க ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது.

இறுதியில் ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி, சூர்யவன்ஷியை தன்வசப்படுத்தியது.

வைபவ் சூர்யவன்ஷி பீகாரைச் சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டாளர். இவர், 12 வயது 284 நாள்கள் நிறைவுபெற்றிருந்த நிலையில், 2023-24 ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.

ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் மிகச் சிறிய வயதில் அறிமுகமான விளையாட்டாளர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றுள்ளார். முன்னதாக யுவராஜ் சிங் தனது 15 வயது 57 நாள்களிலும், சச்சின் 15 வயது 230 நாள்களிலும் அறிமுகமானது நினைவுகூரத்தக்கது.

சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ‘யூத் டெஸ்ட்’ தொடரில் அவர் 62 பந்துகளில் 104 ஓட்டங்கள் எடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

13 வயது 188 நாள்கள் நிறைவுபெற்றிருந்த நிலையில் சதம் அடித்தார். கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்தவர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

இவர் 58 பந்துகளில் சதமடித்ததால் இளம் வயதில் அதிவேகமாகச் சதமடித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகச் சிறிய வயதில் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் குவித்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.

குறிப்புச் சொற்கள்