ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

ராஜஸ்தானில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்

படம்: பிக்சாபே

28 Aug 2023 - 5:19 pm

1 mins read

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

கிரண் கன்வார் எனும் 28 வயதுப் பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்ததாக ஆயுஷ்மான் மருத்துவமனை தெரிவித்தது.

அவர்களில் மூன்று பிள்ளைகள் ஒரு கிலோ 350 கிராம் எடையுடன் பிறந்தனர். நான்காவது பிள்ளையின் எடை ஒரு கிலோ 650 கிராம்.

எடை குறைந்த மூன்று பிள்ளைகளும் பாதுகாப்பு கருதி வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நான்காவது பிள்ளை தாயுடன் இருக்கிறது என்று மருத்துவர் ஷாலினி அகர்வால் கூறினார்.

குறிப்புச் சொற்கள்