போபால்: இணையவெளித் தாக்குதல்களை முறியடிப்பதன் அவசியத்தை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ கற்றுக்கொடுத்துள்ளதாக இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியா தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து இருப்பதை ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
“இந்திய உள்நாட்டு ஆயுதங்களின் வெற்றியை ஆப்பரேஷன் சிந்தூர் உறுதி செய்துள்ளது. வரும் காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை உடன் இருக்க வேண்டும். இந்தியாவில் ஜெட் இன்ஜின்கள் உருவாக்குவதற்கு வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்,” என்றார் திரு ராஜ்நாத் சிங்.
புதிய கண்டுபிடிப்புகள், எதிர்பாராத சவால்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், நாடுகளுக்கு இடையேயான போர் என்பது நிலம், கடல், வான்வெளி மட்டுமன்றி இணையவெளியிலும் விரிவடைகின்றன. இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்,” என்றார் ராஜ்நாத் சிங்.