தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்

1 mins read
0adf8672-b6ba-4710-8979-285ca76ebd67
6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. - படம்: கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெற்று, அன்று மாலை 5 மணிக்கே தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று ஆணையம் அறிவித்துள்ளது.

அன்புமணி, வைகோ, அப்துல்லா, வில்சன், சண்முகம், சந்திரசேகர் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியோடு முடிவடைகிறது.

ஜூன் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாகும். ஜூன் 10ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூன் 12ஆம் தேதி மனுக்களைத் திரும்ப பெற இறுதி நாளாகும்.

ஒருவேளை போட்டி இருக்கும் பட்சத்தில் ஜூன் 19ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படும்.

குறிப்புச் சொற்கள்