தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உ.பி.யில் ரூ.22 கோடியில் 51 அடி சிலையுடன் ராமர் பூங்கா

2 mins read
11ac1fff-0d2b-4c83-b6f3-3c73f414efc7
ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் உள்​ளிட்ட கடவுள்​களின் வடிவங்​கள் மலர்​களால் அலங்​கரிக்கப்பட்டு காட்​சிப் படுத்தப்பட்டிருந்தன. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்​தின் பரேலி​யில் ரூ.22 கோடியில் ‘ரா​மாயண் வாட்​டி​கா’ எனும் பெயரில் ஒரு புதிய பூங்கா 6 ஏக்கரில் அமைக்​கப்​படு​கிறது.

இப்​பூங்​கா​வில் 51 அடி உயர ராமர் சிலை நிறு​வப்​படு​கிறது.

குஜ​ராத் மாநிலத்​தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்​பெரிய 182 மீட்டர் உயர வல்லபாய் படேல் சிலையை வடித்திருந்த பத்ம ஸ்ரீராம் சுத்​தார், இந்த ராமர் சிலையையும் வடித்​துள்​ளார்.

ராமர் கடந்து சென்ற சித்​ரகுட், கிஷ்கிந்​தா, துரோணகிரி உள்​ளிட்ட 6 வனப்​பகு​தி​களின் 60 சிற்​பக் காட்​சிகளும் பூங்​கா​வில் வடிவ​மைக்​கப்​படு​கின்​றன.

பரேலி வளர்ச்சி ஆணை​யம் சார்​பில் இந்தப் பூங்​காவை அதன் துணைத் தலை​வர் அதி​காரி மணி​கண்​டன் அமைத்து வரு​கிறார்.

பூங்கா பணி​கள் முடி​வடையும் தரு​வா​யில், ஒரு மலர்க் கண்​காட்​சிக்​கும் இவர் ஏற்​பாடு செய்​திருந்​தார்.

கடந்த வெள்​ளிக்​கிழமை தொடங்​கிய மலர்க் கண்​காட்சி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்​ததாக மணிகண்டன் கூறினார்.

இந்த பூங்​கா​வில் பல மாதங்​களுக்கு முன்​னர் ஏறக்குறைய 1,600 பூஞ்​செடிகள் நடப்​பட்​டன. மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட ராமர், சீதை, ஹனு​மன் உள்​ளிட்ட கடவுள்​களின் வடிவங்​கள் மலர்​களால் அலங்​கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டிருந்தன.

“ஆன்​மிகம் மற்​றும் கலா​சா​ரத்தை பிர​திபலிக்​கும் வகை​யில் ராமாயண் வாட்​டிகா அமைக்​கப்​படு​கிறது. இன்​னும் மூன்று மாதங்​களில் திறக்​கப்பட உள்ள பூங்​கா​வில், தற்​போது நடத்​திய மலர்க் கண்​காட்​சி, இனி ஒவ்​வொரு ஆண்​டும் மகா சிவ​ராத்​திரிக்​காக மூன்று நாள்​கள்​ நடை​பெறவுள்​ளது,” என்று இந்து தமிழ் திசை நாளிதழிடம் நெய்​வேலியைச் சேர்ந்த தமிழரான அதி​காரி மணி​கண்​டன் ஐஏஎஸ் கூறினார்.

மலர்க் கண்​காட்​சி​யில் ராமாயணத்​தில் ராமர் கடந்து சென்ற வனத்​தில் பூத்திருந்த மலர்​களும் காட்​சிப்​படுத்​தப்​பட்டிருந்தன.

முழு தோட்​ட​மும் லட்​சக்​கணக்​கான மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்