தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் பாலியல் வன்கொடுமை; ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் சிறை

2 mins read
7f57b03a-873b-4b5d-b3f1-87dc912751d6
துணைப்பாட வகுப்பிற்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் ரீதியாக சீரழித்தவருக்கு திருவனந்தபுரம் சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ரேகா 111 ஆண்டுகள் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். - கோப்புப்படம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மனோஜ் என்பவர் தன் வீட்டுக்குத் துணைப்பாட வகுப்புக்கு வந்த மாணவியை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதை கைப்பேசியில் காணொளி எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தான் சொல்வதை அந்த மாணவி கேட்கவில்லை என்ற காரணத்தால் அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் தனது நெருங்கிய நண்பர் வட்டாரத்தில் பரப்பினார்.

இதையறிந்த அந்த மாணவியின் பெற்றோர், அந்தத் துணைப்பாட ஆசிரியர் மனோஜ் மீது காவல்துறையில் புகார் கொடுத்தனர். அதன் அடிப்படையில் காவல்துறை மனோஜைக் கைது செய்தது. மேலும், அவருடைய கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கைப்பேசியில் சிறுமியை வன்கொடுமை செய்த புகைப்படங்கள், காணொளிகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவம் 2019, ஜூன் 2ஆம் தேதி மனோஜின் வீட்டில் நடந்தது. அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்துவந்த மனோஜ், தனியாக துணைப்பாட வகுப்புகளை நடத்தி வந்தார். அப்போது, சிறப்பு வகுப்பு நடத்துவதாகக் கூறி அந்த மாணவியை மட்டும் தனியாக வரவழைத்துள்ளார். துணைப்பாட வகுப்பிற்கு வந்த மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருவனந்தபுரத்தின் சிறப்பு விரைவு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி ரேகா குற்றவாளி மனோஜுக்கு நினைத்துப் பார்க்க முடியாத வகையில் ஒரு தீர்ப்பை அளித்துள்ளார்.

மனோஜ் மீது பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சட்டப் பிரிவுக்கும் 3 மாதங்கள் முதல் 30 ஆண்டுகள் வரைச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனோஜ், மொத்தம் 111 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும், அபராதமாக 1.05 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். நீதிபதியின் இந்தத் தீர்ப்புக்கு அதிகமானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்