புதுடெல்லி: மின்னணு உற்பத்தித் துறையானது, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக மாறும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டில் மின்னணு உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பு விரிவடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இதன் காரணமாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. வடிவமைப்புத் திறன்கள் வளர்ந்து வருவதுடன் புதிய வடிவமைப்புகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் உருவாகி வருவதும் கவனிக்கத்தக்க அம்சங்களாகும்,” என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியுள்ளார்.