இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளைப் பெற்றுள்ளார் ஒரு பெண்.
அரிய வகை சம்பவமாகப் பார்க்கப்படும் இது மே 22ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் நடந்தது.
தாயும் ஐந்து பிள்ளைகளும் நலமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இருப்பினும் பிள்ளைகள் போதிய எடையில் இல்லாததால் அவர்கள் சிறப்பு சிகிச்சைப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.
குழந்தைகளின் படத்தை மருத்துவமனை அதன் சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளது.
உலகில் கிட்டத்தட்ட 55,000,000 பிரசவங்களில் ஒரு பிரசவம் இதுபோல் அமையும்.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் போலந்து-பிரிட்டன் தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தன.