மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

2 mins read
039c1677-e33a-4c7d-8945-904cd00cd3fd
‘பபானிபூர்’ வாக்குச்சாவடியில் முதல்வர் மம்தா பானர்ஜி வாக்களித்தார். - படம்: மிட் டே
multi-img1 of 2

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை (மே 2) மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அங்கு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 77 வாக்குச்சாவடிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அரசியல் கட்சிகள் புகார் எழுப்பின. எனவே, அக்குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த அவை வலியுறுத்தின.

வாக்குப்பதிவின்போது சில தொகுதிகளில் வாக்​காளர்​களின் சட்டைப்பையில் ரகசிய கேமராவைப் பொருத்​தி, அவர்​கள் யாருக்கு வாக்​களிக்​கின்​றனர் என்​ப​தைக் கண்​காணிக்க முயற்சி நடந்​த​தாகக் கூறப்​பட்​டது.

அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த இந்தியத் தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டது. அதையடுத்து, சிறப்புப் பார்​வை​யாளர் சுப்​ரதா குப்தா ஆய்வு நடத்​தியதன் பேரில், 15 வாக்​குச்​சாவடிகளில் மறுவாக்​குப்​ப​திவு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

அதன் பிறகு, ‘மகரஹட் பஸ்​சிம்’ தொகு​தி​யில் 11 வாக்​குச்​சாவடிகளி​லும் ‘டைமண்ட் ஹார்​பர்’ தொகு​தி​யில் நான்கு வாக்​குச்​சாவடிகளி​லும் மே 2ஆம் தேதி மறுவாக்​குப்​ப​திவு நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, கோல்கத்தாவில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எந்த வகையான கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனக் காவல்துறை அறிவித்துள்ளது.

அந்த மையங்கள் அமைந்துள்ள ‘சாஹித் குதி​ராம் போஸ்’ சாலை, ‘ஜாதவ்​பூர்’, ‘டைமண்ட் ஹார்​பர்’ சாலை, ‘லார்ட் சின்ஹா ஹால்’, ‘பெல்​டலா’ சாலை உள்​ளிட்ட 7 இடங்​களில் அந்தத் தடை அமலில்​ இருக்​கும்​ எனக் காவல்துறை தெரிவித்தது.

இதனிடையே, கோல்கத்தாவில் வாக்கு எண்​ணிக்கை மையங்​களில் உள்ள ‘ஸ்ட்​ராங் ரூம்’ எனப்​படும் பாது​காப்பு அறை​களில் மின்​னணு வாக்​குப்பதிவு இயந்​திரங்​கள் வைக்கப்பட்டுள்​ளன. அந்த மையங்​கள் அருகே சந்​தேகத்​திற்​குரிய நபர்கள் சிலர் நடமாடுவதாகத் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வர்​கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், முதல்​வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் ‘பபானிபூர்’ தொகு​தியில் வெள்ளிக்கிழமை (மே 1) திடீர் பதற்றம் நிலவியது.

அங்குள்ள ‘ஷகாவத்’ பள்ளி, வாக்கு எண்ணும் மையங்களில் ஒன்றாகும். அங்குச் சில முறைகேடுகள் நடை​பெறு​வ​தாகச் சந்​தேகம் எழுந்ததை அடுத்து, மம்தா பானர்ஜி அங்கு விரைந்தார். அவர் நீண்ட நேரம் அங்கிருந்த அவரது கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், அங்கு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இந்நிலையில், காவல்துறையின் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்