இந்தியாவில் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவுக்குப் பரிந்துரை

இந்தியாவில் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதாவுக்குப் பரிந்துரை

2 mins read
6a9f4435-1578-4b53-a569-ce933dac033a
சமூக ஊடகங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர், குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் உத்தேச மசோதாவை பரிந்துரை செய்துள்ளார்.

மெட்டா, யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது.

இளையர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதால் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து உலக முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற தடையைக் கொண்டு வர பிரிட்டனும் பரிசீலித்து வருகிறது.

இந்தியாவிலும் சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் நண்பரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்.எஸ்.கே தேவராயலு, சமூக ஊடகத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

“நமது குழந்தைகள், சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தளங்களுக்கு உலகிலேயே அதிக அளவு தரவுகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.

“இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்கள், நவீன செயற்கை நுண்ணறிவு முறைகளை உருவாக்குகின்றன. அதாவது இந்திய பயனீட்டாளர்கள் செலவில்லாத தரவுகளை வழங்குபவர்களாக இருக்கின்றனர்,” என்று ஜனவரி 30ஆம் தேதி ராய்ட்டர்சிடம் தேவராயலு கூறினார்.

பிரிட்டன், டென்மார்க் மற்றும் கிரீஸ் ஆகியவை இந்தப் பிரச்சினையை ஆராய்ந்து வரும் நிலையில் பிரான்ஸ், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சமூக ஊடகங்களில் இருந்து தடை செய்யும் சட்டத்தை ஆதரித்துள்ளது.

திரு. தேவராயலுவின் 15 பக்க சமூக ஊடக (வயது கட்டுப்பாடுகள் மற்றும் இணையப் பாதுகாப்பு) மசோதா, பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.

ஆனால் ராய்ட்டர்ஸ் அதனைப் பார்வையிட்டுள்ளது. அதன்படி, 16 வயதுக்குட்பட்ட எவரும் சமூக ஊடகக் கணக்கை உருவாக்கவோ, பராமரிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அப்படியிருப்பது கண்டறியப்பட்டால் அதை முடக்க வேண்டும் என்றும் மசோதா கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்