தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐநா பாதுகாப்பு மன்றத்தில் சீர்திருத்தம் தேவை: ஜெய்சங்கர்

1 mins read
3dd5f20f-ef8c-4bdc-a564-267dd4e0a32e
அமைச்சர் ஜெய்சங்கர். - படம்: ஊடகம்

நியூயார்க்: ஐநா பாதுகாப்பு மன்றத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அங்கு சென்றுள்ள அவர், ‘பிரிக்ஸ்’ அமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், கொந்தளிப்பான உலகச் சூழலில் அரசு தந்திர உறவுகளை ‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள் வலுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

“பிரிக்ஸ் அமைப்பு ஆக்கபூர்வமான மாற்றத்துக்கான வலுவான குரலாக, உறுதியாக நிற்கிறது. அமைதியைத் தக்கவைத்தல், பேச்சுவார்த்தைகள், அரச தந்திர, அனைத்துலக சட்டங்களைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்.

“ஐநா பாதுகாப்பு மன்றத்தில் விரிவான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதற்காக ‘பிரிக்ஸ்’ அமைப்பு ஒருமனத்துடன் குரல் கொடுக்க வேண்டும்.

“அதிக வரிவிதிப்பு உட்பட வணிக மோதல் நிலவி வரும் இவ்வேளையில், வணிக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்,” என்றார் திரு ஜெய்சங்கர்.

முன்னதாக, ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திலும் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அமெரிக்காவிலேயே இத்தகைய கூட்டத்தை இந்தியா நடத்தியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்புச் சொற்கள்