அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை தோளில் சுமந்த உறவினர்கள்

அமரர் ஊர்தி இல்லாததால் இறந்தவர் உடலை தோளில் சுமந்த உறவினர்கள்

2 mins read
4117c431-115e-4f29-a1c8-cb5740a34a37
இறந்தவரின் உடலை வீட்​டிற்கு எடுத்​துச் செல்ல மருத்துவமனை சார்​பில் மருத்துவ வாகனம் அல்​லது அமரர் ஊர்தி வழங்கப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது. - படம்: இந்து தமிழ் திசை

பத்ராசலம்: தெலுங்​கானா மாநிலம், பத்​ராசலம் அரசு மருத்துவமனை​யில் அமரர் ஊர்தி வசதி இல்​லாத​தால் இறந்தவரின் உடலை அவரது உறவினர்​கள் நான்கு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தெலுங்​கானா மாநிலம், பத்​ராசலம் பகு​தியைச் சேர்ந்த விவ​சாயி கண்டி வெங்​கண்ணா (45). இவர் கடந்த வாரம் தனது விவ​சாய நிலத்​தில் இருந்​த​போது கடும் வெயி​லால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் பத்​ராசலம் அரசு மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்​தும் பலனின்றி அவர் உயி​ரிழந்​தார்.

இதையடுத்து அவரது உடலை வீட்​டிற்கு எடுத்​துச் செல்ல மருத்துவமனை சார்​பில் மருத்துவ வாகனம் அல்​லது அமரர் ஊர்தி வழங்கப்​பட​வில்லை என கூறப்​படு​கிறது. இதனால் உறவினர்​கள் வேறு வழி​யின்றி வெங்​கண்​ணா​வின் உடலை சுமார் நான்கு கி.மீ. தொலை​வுக்குத் தங்​கள் தோள்​களில் சுமந்து சென்​றனர்.

இது தொடர்​பான புகைப்​படங்​களும் காணொளியும் தற்​போது சமூக வலைத்​தளங்​களில் பரவி வரு​கிறது. மருத்துவமனையில் ஓர் அமரர் ஊர்தி இருக்​கும் நிலை​யில் அது வெங்​கண்​ணா​வின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​ப​டாதது குறித்து விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக மாவட்ட அதி​காரி​கள் தெரிவித்​துள்​ளனர்.

இந்தச் சம்​பவம் மக்​களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருப்​பதுடன் மாநிலத்​தின் மருத்​துவ உள்​ கட்​டமைப்பு மற்​றும் அவசர சேவை குறை​பாடு​கள் குறித்து அரசி​யல்​ ரீ​தி​யான விமர்​சனங்​களை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது. தெலுங்​கா​னாவை காங்கிரஸ் அரசு மீண்​டும் துயரத்​திற்​கும் அவமானத்​திற்​கும் தள்ளுவ​தாக பிஆர்​எஸ் செயல் தலை​வர் கே.டி.ராம​ ராவ் குற்றஞ்சாட்​டி​யுள்​ளார்.

“கேசிஆர் ஆட்​சி​யில் ஏழை மக்களின் இறு​திப் பயணம்​ கூட பிரத்​தியேக சேவை​கள் மூலம் கண்​ணி​ய​மாக நடத்​தப்​பட்​டது. இன்​றோ, இறந்​தவர் உடல்​களை குடும்​பத்​தினர் தங்​கள் தோள்​களில் சுமக்க நிர்​பந்​திக்​கப்​படு​கிறார்​கள். இது நெஞ்சை நொறுக்​கு​வ​தாக​வும் வெட்கக்கேடானதாக​வும் இருக்​கிறது,” என்று அவர்​ தனது சமூக ஊடகப் பதி​வில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மாநிலம்காங்கிரஸ்சிகிச்சை