மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடக்கம்

மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்தும் பணி தொடக்கம்

1 mins read
cc9a43f1-196d-4aeb-856c-df2dd7f144a0
ஆசியாவின் ஆகப் பெரிய குடிசைப் பகுதி உருமாற்றத் திட்டங்களில் ஒன்றாக தாராவிப் பெருந்திட்டம் கருதப்படுகிறது. - கோப்புப்படம்: இந்து தமிழ் திசை

மும்பை: ​மும்பை தாராவி மறுசீரமைப்புத் திட்​டத்​துக்​காக அப்​பகு​தி​யில் வசிக்​கும் மக்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்​தும் பணி தொடங்​கப்​பட்டுள்​ளது.

முதற்கட்​ட​மாக செக்​டர் 6, சாகுநகர் பகு​தி​யில் வசிக்​கும் குடும்​பங்​களை வேறு பகு​தி​களில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்​கப்​பட்டுள்​ளது.

அங்​கிருந்து ஏறக்குறைய 900 பேர் படிப்​படி​யாக வெளி​யேற்​றப்பட உள்​ளனர். இதற்​காக நோட்​டீஸ் வழங்​கப்​பட்டு உள்​ளது. தாராவியிலிருந்து வீடு​களை காலி செய்ய ரூ.15,000 உதவித் தொகை வழங்​கப்​படு​கிறது.

மேலும், ஒவ்​வொரு குடும்​பத்​துக்​கும் மாதம் ரூ.22,000 வாடகை படி வழங்​கப்படவுள்​ளது. பெரிய வீடு​களில் வசிக்​கும் குடும்​பங்​களுக்கு தலா ரூ.30,000 வரை வாடகை படி வழங்கப்படும்.

தாரா​வி​யில் கட்​டப்​படும் புதிய வீடு​களில் மக்​கள் குடியேறும்​வரை மாதந்​தோறும் வாடகை படி வழங்​கப்​படும். 2028க்​குள் தாரா​வி​யில் 10,000 வீடு​கள் கட்​டப்​பட்டு பயனாளிகளிடம் ஒப்​படைக்​கப்​படும்.

2032 ஜனவரிக்​குள் திட்​டப் பணி​களை முழு​மை​யாக நிறைவுசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்​ளது.

அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மட்​டுமன்றி பள்​ளி​கள், சமு​தாய நலக்​கூடங்​கள், பூங்​காக்​கள், மருத்​து​வ​மனை​கள், குழந்​தைகள் நல மையங்​கள், வணிக வளாகம், தொழிற்​பூங்கா உள்ளிட்​ட​வை​யும் தா​ரா​வி​யில் அமைக்​கப்பட உள்​ளதாக மும்​பை மாநக​ராட்​சி அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

குறிப்புச் சொற்கள்