தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக மீனவர்கள் 10 பேர் இலங்கைக் கடற்படையால் கைது

1 mins read
72f325d1-7e4e-496e-8168-f4e3eeb6bb24
மீனவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்லும் இலங்கைக் கடற்படையினர். - படம்: கோப்புப் படம்

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேசுவரம் மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறப்பட்ட மீனவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கைக் கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 70க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களை இலங்கைக் கடற்படை கைதுசெய்துள்ள சம்பவம் பற்றி அறிந்த மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்