ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பதியாலி தானி பகுதியைச் சேர்ந்த மூன்று வயதுச் சிறுமி சேத்னா, கடந்த திங்கள்கிழமை தன் வீட்டுக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கிருந்த 150 அடி ஆழம்கொண்ட மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் அவள் தவறி விழுந்தாள்.
இதையடுத்து கடந்த சில நாள்களாக சிறுமியைக் காப்பாற்ற மீட்புப் படையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.