விறகு அடுப்புக்கு மாறும் ஹோட்டல்கள்; மின்சார அடுப்பை நாடும் வீடுகள்

ஹோட்டல்களில் உணவுவகைகளின் எண்ணிக்கை குறைப்பு; விரைவு உணவுகள் நிறுத்தம்; சில ஹோட்டல்கள் தற்காலிக மூடல்

விறகு அடுப்புக்கு மாறும் ஹோட்டல்கள்; மின்சார அடுப்பை நாடும் வீடுகள்

2 mins read
1dd3cf73-74bc-44c6-9a5a-4655347a4c02
விறகு அடுப்பில் சமைக்கும் ஹோட்டல் ஊழியர்கள். - படம்: தி இந்து

புதுடெல்லி: ஈரான் போரினால் கச்சா எண்​ணெய், எரி​வாயு, திரவ பெட்​ரோலி​ய எரி​வாயு (எல்​பிஜி) போன்றவற்றின் உற்​பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிக்கப்​பட்​டுள்ளன.

திரவ பெட்​ரோலி​ய எரி​வாயு விநியோகம் பாதிக்​கப்​பட்டுள்ளதால் இந்​தி​யா​வில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு கலன் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்​தி​யா​வில் பல ஆயிரம் ஹோட்​டல்​கள் உட்பட 330 மில்லியன் வீடுகளில் எல்​பிஜி எரி​வாயு பயன்​படுத்​தப்​படு​கிறது. அங்கு ஆண்டுக்கு 31.3 மில்​லியன் டன் எரி​வாயு உபயோகப்படுத்தப்படுகிறது.

எரி​வாயு விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்​னை, பெங்​களூரு உள்ளிட்ட பெரு நகர ஹோட்​டல்​கள் பழையபடி விறகு அடுப்பு முறைக்கு மாறிவரு​கின்​றன. ஹோட்​டலில் விற்கப்படும் உணவு வகை​களின் எண்​ணிக்​கை​யும் குறைக்கப்பட்டுள்​ளது.

குறிப்​பாக அதிக எரிபொருள் தேவைப்​படும் விரைவு உணவு விற்​பனை நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மும்பை, கோல்​கத்​தா ஆகிய நகர்களில் 20 விழுக்காடு ஹோட்டல்​கள் தற்​காலிக​மாக மூடப்​பட்​டுள்​ளன.

விறகு அடுப்புக்கு மாறியதுடன், அதிக எரிவாயு தேவைப்படும் வாட்டிய கோழி, இறைச்சி, கெபாப் போன்ற உணவுவகைகளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
விறகு அடுப்புக்கு மாறியதுடன், அதிக எரிவாயு தேவைப்படும் வாட்டிய கோழி, இறைச்சி, கெபாப் போன்ற உணவுவகைகளை ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. - படம்: நியூஸ் 9

வணிக கலன்கள் கிடைக்​காத​தால், கள்​ளச் சந்​தை​யில் எரிவாயு கலன்கள் மிக அதிக விலைக்கு விற்​கப்​படு​கின்​றன. அதனால், மீண்​டும் பழங்​கால விறகு அடுப்பு முறைக்கு மாறு​வ​தாக ஹோட்​டல் உரிமை​யாளர்​கள் பலர் தெரி​வித்​துள்​ளனர்.

ஹோட்​டல்​களில் உணவு விநி​யோகம் அத்​தி​யா​வசியத் தேவை என்பதால், எரிவாயு விநி​யோகத்தை மத்​திய அரசு சீர்​படுத்த வேண்டும் என ஹோட்​டல் உரிமை​யாளர் சங்​கத்​தினர் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

கள்​ளச் சந்​தை​யில் எரிவாயு கலன் விற்பனையைத் தடுக்க, எரிவாயு கலனுக்கான காத்​திருப்புக் காலம் 21 நாள்களில்​ இருந்​து 25 நாள்களாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், பலரும் மின்சார அடுப்புகளுக்கு மாறுவதால், இணைய வணிகத் தளங்களில் மின்சார அடுப்புகளின் (இன்டக்சன் ஸ்டவ்) விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 4, 5 நாள்களில் மட்டும் மின் அடுப்புகளின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, டெல்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அமேசான் தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விற்பனை 20 மடங்கு அதிகரித்துள்ளது.

தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலை நீடித்தால், மின்சார அடுப்புகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் என்று வணிகர்கள் கருத்துக்கூறினர்.

குறிப்புச் சொற்கள்