இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு மீண்டும் விமானங்கள் இயங்கும்

இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு மீண்டும் விமானங்கள் இயங்கும்

1 mins read
010e2f77-f26e-43e3-b64a-0cd00ea28903
இண்டிகோ விமானம். படம்: இணையம் -

துபாய்: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு (UAE) வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ (IndiGo) உள்ளிட்ட பல்வேறு விமான நிறுவனங்களில் விமானச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வந்தது.

இதில் பலர் விமான நிலையத்துக்கு வருகை புரியும்போது ஆர்.டி. பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளாமல் வருகை தந்ததை முன்னிட்டு, அந்த நிறுவனம் விமானங்களை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) முதல் ரத்து செய்யப்பட்ட விமான சேவை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு மீண்டும் தொடங்கும் என இண்டிகோ விமான நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விமான சேவை ரத்து செய்யப்பட்டதற்கு நடைமுறை செயல்பாட்டு பிரச்சினை காரணம் என அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.