சென்னை: தமிழகத்தில் ஆவணப் பதிவு மூலம் ஒரே நாளில் ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தமிழகப் பதிவுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆவணி மாத சுபமுகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4) கூடுதல் முன்பதிவு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்மூலம், பதிவுத் துறை வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவில் நிகழ் நிதியாண்டில், ஒரே நாளில் அரசுக்கு ரூ.274.41 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, நிகழ் நிதியாண்டில் கடந்த 30-ஆம் தேதி பதிவுத் துறையில் ஒரே நாளில் அரசுக்கு ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.