தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகாரிகளிடம் சரணடைந்த நக்சலைட் பெண்

1 mins read
6374211c-bc1a-4161-aebf-4b4593980357
ஜான்சி என்ற பெண் 2005ல் நக்சலைட் அமைப்பில் சேர்ந்தார்.  - படம்: ஏஎன்ஐ

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை ஒப்படைப்போர்க்கு எட்டு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதை அடுத்து காரியாபந்த் மாவட்டத்தில் அந்தப் பெண் தானாவே முன்வந்து அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளார்.

ஜான்சி என்ற அந்தப் பெண் 2005ல் சட்டவிரோதமாக இயங்கி வரும் நக்சலைட் அமைப்பில் சேர்ந்தார்.

அத்துடன், கடந்த 20ஆண்டுகளாக அவர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்குப் பெரும் சவாலை நக்சலைட் இயக்கம் தந்துவருகிறது.

இந்தச் சரணடைதலுக்கு வட்டார காவல்துறை முக்கியப் பங்கு வகித்தது என்று தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதத்தைவிடுத்து சராசரி மக்களுடன் இணைந்து புதிய வாழ்க்கை தொடங்கும்படி காவல்துறை, அந்த இயக்கத்தினரைக் கேட்டு வந்தது.

சரண் அடைபவர்களில் தகுதியுள்ள ஒவ்வொருவரும் உடனடியாக ரூ. 1.5 லட்சம் நிதியுதவியுடன் அதிகபட்சமாக 36 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகையைப் பெறுவார்கள் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

மேலும், அந்த நபர் விரும்பும் வேலைவாய்ப்பில் பயிற்சியும் பெறுவார் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்