புதுடெல்லி: இந்தியாவில் மிகப்பெரிய ‘தாதா’வாக உள்ளார் லாரன்ஸ் பிஷ்னோய்.
அவரின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் (படம்) குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது.
அன்மோல் மீது பல வழக்குகள் உள்ளன. நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டு வருகிறார்.
அன்மோல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய அன்மோல், ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளில் முக்கியமான நபராகக் கருதப்படுகிறார்
அன்மோலின் கைது இந்திய அமைதிக்கு முக்கியமானது என்று அதிகாரிகள் கூறினர்.

