சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைத் தாக்கிய காண்டாமிருகம்

சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைத் தாக்கிய காண்டாமிருகம்

1 mins read
a69cd823-986c-4f22-ae8c-50aa49f35610
உயிர் தப்பிய பயணிகள் வாகன ஓட்டுநரைப் பாராட்டினர். - படம்: தினமணி

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் உள்ள தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கான வாகனத்தை காண்டா மிருகம் ஒன்று தாக்கியதால் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அங்குள்ள மனாஸ் தேசிய உயிரியல் பூங்காவில், இயற்கையான சூழலில் வாழும் வனவிலங்குகளைக் காணும் பூங்கா (சஃபாரி) நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால், அவ்வாறு சுற்றுப்பயணிகளுடன் சென்ற வாகனத்தைத்தான் ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம் தாக்கியது. இதனால், அதிலிருந்த பயணிகள் பீதியில் உறைந்து போயினர். காண்டா மிருகம் தாக்கியதில் அந்த வாகனம் குலுங்கியது.

இந்நிலையில், வாகன ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்டு, வாகனத்தைக் காண்டா மிருகத்திடம் இருந்து மெதுவாக நகர்த்திச் சென்றார். காண்டா மிருகத்தின் கவனத்தை ஈர்க்காத வகையில் அவர் செயல்பட்டதாக உயிர் தப்பிய பயணிகள் பாராட்டினர்.

அந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்