இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை கூடியது

1 mins read
6c0b0fb9-95e6-496b-9da7-1046d3cdd321
2025-26 நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: பிஸ்னஸ் டுடே

புதுடெல்லி: இந்தியாவில் வருமான வரித்தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், அதிக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் வருமான வரித் தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை ஒரு விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை இணையத்தளத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், 2025-26 நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை 22 விழுக்காடு அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டளவில், ஆண்டுதோறும் ஐந்து லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளது.

அதேசமயம், ரூ.5 லட்சத்துக்கு மேலும் ரூ.10 கோடிக்கும் மேலும் வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி கண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிவதாக நிதி நிபுணர்கள் கூறியுள்ளனர்.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அதிக வருமானம் ஈட்டுவோர் தாமாக முன்வந்து வரி செலுத்துவதும் அதிகமாகி உள்ளது. வரிவிதிப்பில் உள்ள வெளிப்படைத்தன்மையும் இதற்கு முக்கியக் காரணம் என நிதித்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்