36 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொள்ளையன்

36 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட கொள்ளையன்

1 mins read
a5969288-6cd5-4b10-bb35-93d001b6dc61
ஜோஸ் வீட்டில் சோதனை நடத்தியபோது ஒரு துப்பாக்கியும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. - சித்திரிப்புப் படம்: தி ஸ்டேட்ஸ்மேன்

திருவனந்தபுரம்: 36 ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி சிக்கியுள்ளார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஸ், 1990ஆம் ஆண்டு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் நடந்துநரை நிறுத்தி, பயணச்சீட்டு வசூல் பணத்தைக் கொள்ளையடித்தார். பின்னர் தலைமறைவான அவரை, அம்மாநிலக் காவல்துறை தேடி வந்தது.

அவரோ, மைசூருக்குத் தப்பிச்சென்று சிவகுமார் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

அண்மையில் ஜோஸுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, மைசூரு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது ஜோஸ் வீட்டில் சோதனை நடத்தியபோது ஒரு துப்பாக்கியும் சில ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

அதுகுறித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறிய காரணத்தால், கேரள காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில், அவருக்குக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதியானது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்