பள்ளிப் பாடங்கள் நடத்தும் 'சிஷா' இயந்திர ஆசிரியை

பள்ளிப் பாடங்கள் நடத்தும் 'சிஷா' இயந்திர ஆசிரியை

1 mins read
1efd6f14-9d77-41e6-be56-bd155b18df48
-

பெங்களூருவில் 4ஆம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் போதிப்பதற்காக 'சிஷா' என்ற இயந்திர ஆசிரியை உருவாக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியை சேர்ந்தவரான அஷய் மஷேல்கர் என்ற இயற்பியல் பேராசிரியர், சிறுமி தோற்றத்துடன் காணப்படும் இந்த இயந்திர ஆசிரியையை உருவாக்கி உள்ளார்.

வாய்ப்பாடு, குழந்தை களுக்கான பாடல்கள் ஆகியவற்றை இந்த இயந்திர ஆசிரியை சுலபமாகக் கற்றுக் கொடுக்கும். மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியான பதிலளிக்கும் என்கிறார் அஷய் மஷேல்கர். விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள இந்த முயற்சி பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.