சிம்லா: மும்பையை சேர்ந்த பிரியா என்ற பெண் தனது கணவருடன் இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
சுற்றுலா பயணிகள் காரில் சண்டிகர்- மணாலி நெடுஞ்சாலையில் சென்ற போது மாண்டி அருகே திடீரென பாறைகள் சரிந்து கார் மீது விழுந்தன.
இதில் கார் நொறுங்கி பிரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது கணவர் மற்றும் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மாண்டி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது இமாச்சல பிரதேசத்தில் கடும் பனி பொழிவு இருப்பதால் அடிக்கடி பனி சறுக்கு ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன.

