கேதார்நாத் கோயிலுக்கு 27 நிமிடங்களில் செல்ல ரூ.5,000 கோடியில் கம்பிவண்டித் திட்டம்

கேதார்நாத் கோயிலுக்கு 27 நிமிடங்களில் செல்ல ரூ.5,000 கோடியில் கம்பிவண்டித் திட்டம்

கோப்புப்படம்: தினமணி

25 Nov 2026 - 7:21 pm

1 mins read

புதுடெல்லி: இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு அரை மணி நேரத்திற்குள் சென்றடையும் வகையில், 5,000 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கம்பிவண்டி வசதியை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய மத்தியச் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (நவம்பர் 25) பேசிய அவர் இத்திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார்.

கேதார்நாத் கோயிலுக்குச் செல்லப் பல்வேறு வழித்தடங்கள் இருந்தபோதிலும், ஒவ்வொன்றும் பல சிக்கல்களைக் கொண்டுள்ளன. தற்போது பக்தர்கள் கௌரிகுந்த் பகுதியிலிருந்து கேதார்நாத் செல்ல வேண்டியுள்ளது. மோசமான வானிலை, செங்குத்தான சரிவுப் பாதை போன்றவற்றால் அப்பயணம் மிகுந்த சவாலானதாக அமைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் கம்பிவண்டி வசதி அமைக்கப்பட்டால் 27 நிமிடங்களில் கேதார்நாத் கோயிலைச் சென்றடைய முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கேதார்நாத் கம்பிவண்டித் திட்டத்தைத் தங்களது சொந்த நிதியிலிருந்து 5,000 கோடி ரூபாய் செலவிட்டுச் செயல்படுத்துவதற்கு முதலீட்டாளர்கள் தயாராக உள்ளதாகவும் நிதின் கட்காரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்