லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க ரோஜா வலியுறுத்து

லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க ரோஜா வலியுறுத்து

1 mins read
b209fa73-90ef-4808-baf2-0cbb9106e0e1
நடிகை ரோஜா. - படம்: ஊடகம்

நகரி: திருப்பதி லட்டு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அதன்மூலம் உண்மை வெளிவந்து, புனிதத் தன்மையோடுதான் திருப்பதி லட்டு இருக்கிறது என்பதை பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆந்திர முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “இந்துக்களை ஜெகன்மோகன் ரெட்டியிடம் இருந்து பிரிக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி லட்டுவைக்கூட உபயோகித்துக்கொண்டுள்ளார்,” எனக் குற்றம்சாட்டினார்.

“உச்ச நீதிமன்ற விசாரணையில் இதுகுறித்த உண்மை வெளிவரும். இவ்விவகாரத்தை விசாரிக்க சந்திரபாபு நாயுடு அமைத்த சிறப்புக்குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை.

“பக்தர்களின் உணர்வுகளோடு விளையாடியவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்,” என்று ரோஜா தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்