வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் மூலம் ரூ.10.4 கோடி மோசடி

வாட்ஸ் அப் மூலம் குறுந்தகவல் மூலம் ரூ.10.4 கோடி மோசடி

2 mins read
1de285a7-02fa-44f9-bcea-8366324f03f3
கைதுசெய்யப்பட்டவர்களுடன் மும்பை காவல்துறை அதிகாரிகள். - படம்: இந்து தமிழ்த்திசை

மும்பை: ஐநாக்ஸ் நிறு​வனத்​தில் துணை தலைமை மேலா​ள​ராகப் பணி​யாற்​று​பவர் கிரிஸ் அமின். இவருக்கு தெரி​யாத எண் ஒன்றில் இருந்து நிர்​வாக இயக்​குநர் சித்​தார்த் ஜெயின் போட்டோவுடன் ‘வாட்ஸ்அப்’ தகவல் ஒன்று வந்​தது.

அதில் ‘இது எனது தனிப்​பட்ட போன் எண், இதை யாரிட​மும் தர வேண்​டாம். சித்​தார்த் ஜெயின்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 3-ம் தேதி அதே எண்​ணில் இருந்து ஒரு வாட்ஸ் அப் தகவல் வந்​தது. அதில் ஒரு வங்​கிக் கணக்கை குறிப்​பிட்​டு, கம்​பெனி கணக்​கில் இருந்து ரூ.46.5 லட்​சத்தை அனுப்ப​வும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. அதன்படி அந்த வங்​கிக் கணக்​குக்கு ரூ.46.5 லட்​சத்தை அமின் அனுப்​பி​னார்.

இது​போல அடுத்​தடுத்து 63 முறை மொத்​தம் ரூ.10 கோடியே 40 லட்சத்து 71,924-ஐ அனுப்​பி​யுள்​ளார். இந்​நிலை​யில், கடந்த செவ்​வாய்க்​கிழமை அமின் தனது முதலா​ளியை அலு​வலக லேண்ட்லைன் மூலம் தொடர்புகொண்டு அனுப்​பப்​பட்ட பணத்துக்கு ரசீதுகளைக் கேட்​டுள்​ளார். அப்​போது, நிறுவன இயக்குநர் சித்​தார்த் ஜெயின். “நான் எப்​போது பணம் அனுப்ப சொன்​னேன்?” என்று கேட்டுள்​ளார். அப்​போது​தான் மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஐநாக்ஸ் நிறு​வனம் சார்​பில் மும்பைக் காவல்துறைக்குப் புகார் அளிக்​கப்​பட்​டது. காவல்துறை நடத்​திய புலன் விசாரணையில் பணம் டெல்​லி​யில் உள்ள வங்கிக் கணக்​கு​களுக்கு மாற்​றப்​பட்​டது தெரிய வந்​தது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. அவர்கள் சம்​பந்​தப்​பட்ட வங்​கி​களைத் தொடர்புகொண்​டு, மோசடிப் பேர்வழிகளின் வங்​கிக் கணக்​கு​களில் இருந்து யாராவது பணம் எடுக்க வந்​தால் தகவல் தெரிவிக்​கும்​படி கூறினர்.

டெல்லி ‘ஐடிஎப்சி’ வங்கி ஜசோலா கிளை​யில் உள்ள வங்​கிக் கிளைக்​குத் தங்​கள் வங்கி கணக்​கில் இருந்து ரூ.8 லட்​சம் பணம் எடுக்க 2 பேர் வந்​தனர். வங்கி அதி​காரி​கள் அளித்த தகவலின்​படி காவல்துறையினர் விரைந்து வந்து அந்த 2 பேரை கைது செய்​தனர்.

அவர்​களிடம் நடத்தப்பட்ட விசா​ரணை​யில், தங்​கள் வங்கிக் கணக்குக்கு வரும் பணத்தை எடுத்​துக்கொடுத்​தால் ரூ.30,000 தரு​வ​தாக சிலர் கூறிய​தால் தங்​கள் வங்கிக் கணக்கை அவர்களிடம் தெரி​வித்​த​தாக கூறினர். இதுதொடர்​பாக மேலும் 2 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்​தனர். மோசடிக்கு மூளையாக செயல்​பட்டவரை இணையக்குற்றத்தடுப்பு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.​.

குறிப்புச் சொற்கள்