பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு

பிரகாஷ்ராஜ் மீது ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு

1 mins read
ec724416-a3c7-4c96-bfed-a86a6c1d0292
நடிகர் பிரகாஷ் ராஜ். - படம்: ஏபிபி நியூஸ்

திருப்பதி: இந்துக் கடவுள்​களை அவமதித்ததாக நடிகர் பிர​காஷ்​ராஜ் மீது, திரு​மலை திருப்பதி தேவஸ்​தான அறங்​காவலர்க் குழு உறுப்​பினர் பானு பிர​காஷ் ரெட்டி ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்துக் கடவுள்களை அவமானப்​படுத்​தி யார் பேசினாலும் அவர்​கள் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுப்​போம் என்று அவர் கூறினார்.

அண்மையில் ராமர், லட்​சுமணர் பற்றி கேலி​யாகப் பேசிய நடிகர் பிர​காஷ்ராஜ் மீது பாஜகவின் ஆந்​திர மாநில செய்தித் தொடர்​பாள​ரு​மான பானு பிர​காஷ் ரெட்​டி ரூ.100 கோடி இழப்பீடு கோரி மானநஷ்ட ஈடு வழக்குத் தொடர்ந்​துள்ளார்.

இது தொடர்​பாக, நடிகர் பிர​காஷ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்​டுமென ஆந்​திர காவல்துறையில் புகார் அளித்​துள்​ளார்.

“இந்துக் கடவுள்​கள், கலா​சா​ரம் குறித்து கொச்சைப்படுத்​தும் வகையில் சமூக வலைத்​தளத்​தில் பேசுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்​டது. அப்​படி பேசுபவர்​களின் பேச்சை இனி கேட்​டுக்​கொண்டு இருக்க முடி​யாது,” என்றார் அவர்.

“கோயில்​கள் என்​பது மதசார்​பற்ற இடம் கிடை​யாது. அது இந்​துக்​களுக்கு மட்​டு​மானது. இனி கோயில்​களில் இந்​துக்​கள் மட்​டுமே பணி​யாற்ற வேண்​டும். வியாபாரங்​களும் இந்​துக்​கள் மட்​டுமே செய்ய வேண்டும்.

“ஸ்ரீசைலம் மல்​லி​கார்​ஜுனர் கோயி​லிலும் வேற்று மதத்​தினர் பலர் பணி​யாற்​றுகின்​றனர் எனும் தகவல்​கள் வரு​கின்​றன. இது குறித்தும் ஆந்​தி​ரா​வில் கூட்​டணி அரசு ஆலோ​சித்து முடிவெடுக்கும்.

“ஆந்​தி​ரா​வில் இந்துக் கோயில்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​னால் சட்​டப்​படி கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்